தமிழ் திரையுலகில் பொங்கல் ரிலீஸ் என்றாலே அது ஒரு பெரிய களமாக மாறிவிடும். அந்த வகையில், 2026 பொங்கல் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாக மாறும் என பேசப்படுகிறது. காரணம், 2026 பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மற்றும் விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால், அது பாக்ஸ் ஆபிஸ் போட்டி மட்டுமல்ல; பெரும் மோதலாக மாறும் என பேசப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தனது சினிமா பயணத்தில் பல உயரங்களைத் தொட்டுள்ளார். காமெடி, குடும்பம், ஆக்ஷன், எமோஷன் என எல்லா ஜானர்களிலும் தன்னை நிரூபித்துள்ள அவர், சமீப காலமாக மாஸ் ஹீரோ இமேஜ்ஜினை நோக்கி நகர்ந்து வருகிறார். அந்த பயணத்தில் ‘பராசக்தி’ படம் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்ட் ஆக இருக்கும் என சொல்லப்படுகிறது.

‘பராசக்தி’ என்பது வெறும் கமர்ஷியல் படம் மட்டுமல்ல; அரசியல், சமூக கருத்துகள் கொண்ட படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் தான் இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு “நிஜமான சோதனை” என பார்க்கப்படுகிறது.
சினிமா வட்டாரங்களில் தற்போது அதிகமாக பேசப்படும் விஷயம் என்னவென்றால், ‘பராசக்தி’ படத்தை எப்படியாவது 2026 பொங்கலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் நேரடியாக நெருக்கடி கொடுத்தது சிவகார்த்திகேயன் தான் என்பதே.

இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது சமீபத்திய பேச்சில் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி,“இந்தப் படம் பொங்கலுக்கு தான் வரணும்” என்று சிவகார்த்திகேயன் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை இன்னும் தீவிரமாக மாற்றுவது, விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம். இது நடிகர் விஜய்யின் கடைசி சினிமா படம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுவதால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அபாரமான எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் ‘ஜனநாயகன்’ படமும் 2026 பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனால், ஒரே பொங்கலில் இரண்டு தலைமுறைகளின் மாஸ் ஹீரோக்கள் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது.
விஜய்யின் கடைசி படம் என்பதால், ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏற்படும் ஓபனிங், திரையரங்குகள், ரசிகர் திரள் ஆகியவை மிகப்பெரியதாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில், அதே பொங்கலில் ‘பராசக்தி’யை களமிறக்குவது சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெரிய ரிஸ்க் என்றே பலர் கருதுகின்றனர்.
Listen News!