பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தினை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் நல்ல வசூல் பெற்றாலும் கலவையான விமர்சனங்களினால் தற்போது கொஞ்சம் வசூலில் சரிவை சந்தித்துள்ளது.

பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 11500 திரையரங்குகளில் கடந்த 14-ந் தேதி வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அதாவது பழங்குடியின மக்களில் ஒருவனாகவும், மற்றொன்றில் ஸ்டைலிஷான தோற்றத்திலும் நடித்திருந்தார்.

சூர்யாவின் ரசிகர்கள் இந்த திரைப்படத்தினை கொண்டாடினாலும் விமர்சகர்கள் கொடுத்த மோசமான விமர்சனங்களினால் தற்போது பார்வையாளர்களை இழந்துள்ளது கங்குவா. இதுவரை ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.

இதனை பார்த்தலாவது ரசிகர்கள் திரையரங்கம் வருவார்கள் என்று படக்குழு எதிர்பார்க்கிறார்கள் போல, ஒரு பக்கம் நெட்டிசன்கள் கொஞ்சம் பொறுங்க பொங்கலுக்கு டிவில போடுவாங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.
Listen News!