• Jan 19 2025

விஜய் வீட்டுல பிச்சையெடுத்து முடிஞ்சு.. இப்போ ரஜினி கால்ல.. அசிங்கமா இல்லையா சீமான்?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நாம் தமிழரசு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினிகாந்தை சந்தித்து பேசியது பேசும் பொருளாக மாறி உள்ளது. தற்போது இது தொடர்பான விவாதங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை நடத்தினார். இதை பார்த்த சீமான் கடந்த காலங்களில் தம்பி தம்பி என அழைத்த விஜயை எதிரி என பேசியிருந்தார். அது மட்டும் இன்றி நடு ரோட்டில் இருந்தால் லாரி அடித்து செத்துப் போய்விடுவாய் என்று தாறுமாறாக விளாசி தள்ளி இருந்தார்.

எனினும் அதன் பின்பு விஜய் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க எதுவுமே நடக்காதது போல அதற்கு நன்றி மடலும் அனுப்பியிருந்தார் சீமான். இவ்வாறு கடந்த காலங்களில் தம்பி என  கொண்டாடப்பட்ட விஜய் தற்போது சீமான் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு திட்டி தீர்த்து வருகின்றார்.

d_i_a

இந்த நிலையில், சீமானை கடுமையாக திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. அதாவது விஜய் இடம் வேலையாகவில்லை என்பதற்காக ரஜினியை சந்தித்து பேசி   உள்ளீர்களா? என விளாசி உள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், விஜய்யிடம் வேலையாகவில்லை என்பதற்காக ரஜினியிடம் பிச்சை கேட்டீர்களா? விஜய் அண்ணன் வீட்டில் பிச்சை எடுத்து எடுத்து பார்த்தாச்சு.. அடுத்து ரஜினி வீட்டில்  பிச்சை எடுக்க போய்ட்டீங்களா சீமான்.. 

விஜய் அண்ணன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு வேற எந்த வழியும் கிடைக்கலையா? ரஜினி சார் யாருன்னு ஞாபகம் இருக்கா.. அவர் அரசியலுக்கு வரார் என்று சொன்னவுடனே.. அவர் கர்நாடகா காரரு..  அவரு மேல உப்பு மிளகாய் எல்லாம் போட்டு வறுத்து எடுத்து பாக்கணும் என்று சொன்னது மறந்து போச்சா?

மேடை மேடையா கொச்சைப்படுத்தி பேசினீங்களே இப்போ அவர் வீட்டில் பிச்சை எடுக்க போய் நின்னுகிட்டு இருக்கீங்க.. அசிங்கமா இல்ல.. என்ன ஒரு கேவலமான பொழப்பு.. விஜய் அண்ணன்கிட்ட இருந்து தப்பிக்க ரஜினி சார் கால்ல போய் விழுறீங்க.. 

உங்களை யாருமே நம்ப மாட்டாங்க.. தமிழ்நாட்டு மக்களே சீமானை நம்பாதீங்க.. நான் அவருடைய முதல் மனைவி என் வாழ்க்கையை சீரழிச்சு கர்நாடகாவில் அனாதையாக தூக்கிப்போட்டார். எனது அக்கா நடக்க முடியாத மோசமான நிலையில் இருக்காங்க.. போன வருஷம் 50000 தருகிறேன் என வீட்டுக்குள்ள வந்து வீடியோக்களை வாங்கிட்டு இரவும் பகலுமா டார்ச்சர் பண்ணினாரு.. அத தாங்க முடியாமல் தான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன் யாரும் சீமானுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement