• Jan 19 2025

மனோஜ்க்கு இன்னொரு ஜோடியா? அப்ப ரோகிணி கதி என்ன ஆகுறது?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை’ சீரியல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ட்விஸ்ட்களுடன் சென்று கொண்டிருக்கிறது என்பதும் அதனால் தான் இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இடம் பெற்று சாதனை செய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த சீரியலில் நடிக்கும் கேரக்டர்கள் அனைவருக்குமே இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பதும் சின்ன சின்ன கேரக்டரில் நடிப்பவர்கள் கூட இதனால் தான் சமூக வலைதளங்களில் பிரபலமாகி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த சீரியலில் மனோஜ் என்ற கேரக்டரில் நடித்து வரும் ஸ்ரீதேவா தற்போது இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆகிவிட்ட நிலையில் இந்த ஒரே சீரியலால் அவருக்கு ஃபாலோயர்கள் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்ரீதேவா ’சிறகடிக்க ஆசை’ சீரியலின் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ’ஆரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள திகில் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இன்றி ஸ்ரீதேவா சமீபத்தில் ஒரு புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியிருந்தார். அவருடன் பிரித்வி சசிகுமார் என்பவரும் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஸ்ரீதேவா மற்றும் பிரித்வி சசிகுமார் ஆகிய இருவரும் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவு செய்துள்ளனர். அதில் பிரித்வி ’எங்க அப்பா அண்ணனை எல்லாம்  அடிச்சு தூக்கி போட்டுவிட்டு, என்னை தூக்கிட்டு போயிடுங்க’ என்று சொல்ல, அதற்கு ஸ்ரீதேவா, ‘நான் எதற்காக உங்கள் அப்பா அண்ணனை எல்லாம் அடித்து போட வேண்டும், அதுவும் நீங்க புசுபுசுன்னு  இருக்கிங்க, எப்படி உங்களை என்னால் தூக்க முடியும்’ என்று கூற இந்த காமெடி வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஸ்ரீ தேவா மற்றும் பிரித்வி ஜோடியாக நடித்த இந்த வீடியோவுக்கு ,’மனோஜ் புதிய ஜோடியை தேடி விட்டார், அப்போ ரோகிணி கதி என்ன ஆவது? என்பது போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன

Advertisement

Advertisement