• Jan 18 2025

இதை கூட மீனாவுக்காக செய்ய கூடாதா? பாண்டியன் மீது செந்தில் வருத்தம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் இன்றைய எபிசோடில், இருட்டில் வந்த மர்ம உருவம் உருவம் பழனி என்பது தெரியவந்ததை அடுத்து பதறி வந்த கதிர் அவரை பார்த்து சிரிக்கிறார். பாத்ரூம் போக வந்தேன் என்று பழனி கூற, அப்போது அங்கு வரும் பாண்டியனும் பழனியை திட்டுகிறார்.

இதனை அடுத்து மீனா மற்றும் ராஜி மறுநாள் காலையில் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வாக்கிங் போயிட்டு செந்தில் வர, அவரை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் மீனா. கதிர் மற்றும் ராஜியிடம் ’ராத்திரி என்ன நடந்தது தெரியுமா? நான் கஷ்டப்பட்டு கவர்மெண்ட் வேலைக்கு சில குறிப்புகள் எடுத்து கொடுத்தேன், ஆனால் அதை படிக்காமல் தூங்கிவிட்டார்’ என்று குற்றச்சாட்டு சொல்ல கதிர் மற்றும் ராஜி ஆகிய இருவரும் செந்தில் செய்தது தப்புதான் என்று கிண்டலுடன் கூற ஒரு காமெடியான காட்சி நடைபெறுகிறது.

இதனை அடுத்து பாண்டியன், சரவணன் மற்றும் தங்கமயில் சென்னை செல்வதற்கான டிக்கெட்டுகள் குறித்து பேசுகிறார். அப்போது பிரிமியம் தட்கல் அதிக விலையாகி விட்டது என்று புலம்ப, அதற்கு சரவணன் ’எதற்காக அவ்வளவு செலவு செய்கிறீர்கள்’ என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன், ‘பரவாயில்ல நீ சந்தோஷமாக போயிட்டு வா’ என்று சொல்ல அப்போது பழனி செந்திலும் மீனாவும் சென்னை செல்லும் போது நீங்கள் எந்த டிக்கெட் போட்டு கொடுத்தீர்கள்? என்று கேட்க தங்கமயில், அப்போது ’என்ன சித்தப்பா கோர்த்து விடுகிறீர்களா?  என்று தங்கமயில் கேட்கிறார்.



இதனை அடுத்து நியூஸ் பேப்பர் யாருமே படிப்பதில்லை, இதற்காக 300 ரூபாய் செலவாகிறது என்று பாண்டியன் கூற, அப்போது மீனா ’இங்கிலீஷ் பேப்பரும் வாங்குங்கள்’ என்று கூற ’தமிழ் பேப்பர படிக்கவே  ஆள் இல்லை’ என்று கூறுகிறார்.

செந்தில் கவர்மெண்ட் வேலைக்கு படிப்பதற்காக இங்கிலீஷ் பேப்பர் வேண்டும் என்ற அர்த்தத்தில் மீனா கூறுவதை புரிந்து கொள்ளாமல் பாண்டியன் ’எதற்கு தேவையில்லாமல் வெட்டிச் செலவு’ என்று கூறுகிறார். அப்படி என்றால் நானே என்னுடைய காசில் வாங்கிக் கொள்கிறேன் என மீனா கூற, அதெல்லாம் வேண்டாம், உன்னுடைய காசு என ஏன் பிரித்து பேசுகிறாய் , எல்லாம் நம்முடைய காசு தானே, எதற்கு தேவையில்லாத செலவு என்று கூறுவதால் மீனா வருத்தமடைகிறார்.

அதன்பின் அப்ப நான் என்னுடைய ஆபீஸ்ல்லயே பேப்பர் படித்து கொள்கிறேன்’ என்று வருத்தத்துடன் கூறுவதை செந்தில், கதிர், சரவணன், ராஜி, கோமதி என அனைவரும் புரிந்து கொள்ள, பாண்டியன் மட்டும் புரிந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்த சின்ன விஷயத்தை கூட மீனாவுக்கு செய்ய முடியவில்லையே என்று செந்தில் வருத்தப்படுகிறார். தனது சகோதரர்களிடம், மீனா அவளுடைய வீட்டில் எப்படி வாழ்ந்தவள் தெரியுமா? கேட்கும் முன்னாடியே எல்லாமே வந்து சேரும், ஆனால் இங்கு அவள் நினைக்கும் ஒரு சின்ன விஷயத்தை கூட என்னால் செய்ய முடியவில்லை’ என்று செந்தில் வருத்தப்படுவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement