• Jan 19 2025

மீனா தங்கச்சிக்கு என்ன ஆச்சு? பார்வதி ஆன்ட்டியும் சேர்ந்துட்டாங்களே.. எதோ நடக்க போகுது..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா தங்கையாக நடித்து வரும் சீதா கேரக்டரில் நடிக்கும் சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’சிறகடிக்க ஆசை’ சீரியல் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திருப்பம் ஏற்பட்டு வருகிறது என்பதும் அதனால்தான் பார்வையாளர்கள் மத்தியில் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இந்த சீரியலில் நாயகி மீனா கேரக்டரின் தங்கையாக நடிக்கும் சீதா அவ்வப்போது சில காட்சிகள் மட்டுமே வந்து கொண்டிருக்கும் நிலையில் இனி அடுத்தடுத்து அவரது காட்சிகள் வருவது போன்ற அறிகுறி தெரிகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை வைத்துள்ள சீதா கேரக்டரில் நடிக்கும் சங்கீதா ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அவர் பார்வதி ஆன்ட்டியுடன் சேர்ந்து மொட்டை மாடியில் செம ஆட்டம் போடும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து பார்வதி ஆன்ட்டி மற்றும் சீதா சம்பந்தப்பட்ட கேரக்டர்கள் படமாக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருவரும் அணிந்திருக்கும் காஸ்ட்யூம் இதுவரை சீரியலில் வரவில்லை என்பதால் ஏதோ புதிதாக நடக்கப்போகிறது என்றும் இருவரும் இந்த சீரியலின் முக்கியமான காட்சியை காட்சிகள் நடிக்கப் போகிறார்கள் என்றும் தெரிய வருகிறது.

சங்கீதா சற்றுமுன் பதிவு செய்துள்ள இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.



Advertisement

Advertisement