• Jan 19 2025

கையும் கையும் சிக்கிருச்சு.. சரவணன் - தங்கமயில் ரொமான்ஸ்.. கோமதி திடீர் அழுகை..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று மீனா மற்றும் ராஜியுடன் பேசிக் கொண்டிருக்கும் கோமதி திடீரென அழுகும் காட்சிகள், அதன் பின்னர் நம்முடைய அப்பாவை அடித்தவனை திருப்பி அடிக்க வேண்டும் என்று கதிர் மற்றும் செந்தில் பேசும் காட்சிகள் மற்றும் சரவணன் மற்றும் தங்கமயில் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் தற்போது தான் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பதும் சரவணன் மற்றும் தங்கமயில் நிச்சயதார்த்தம் முடிந்து அதன் பின்னர் எதிர்த்த வீட்டில் உள்ள சொந்தக்காரர்களுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், கல்யாணம் நின்று போகுமோ என்ற சீரியசான காட்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இந்த நிலையில் கோமதி தனது மருமகள்கள் மீனா மற்றும் ராஜியுடன் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய அண்ணன்கள் தன்னை அடித்து மிதித்தார்கள் என்றும் நான் காதலிக்கிறேன் என்று தெரிந்தவுடன் அவர்களது பாசமெல்லாம் போய்விட்டது என்றும் நிறைய அடி அவர்களிடம் வாங்கி இருக்கிறேன் என்று கூறி பழையதை நினைத்து அவர் அழும் காட்சிகளும் அவரை அழுகாதீர்கள் என்று இரண்டு மருமகளுக்கும் சமாதானம் சொல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

இதனை அடுத்து செந்தில் மற்றும் கதிர் ஆகிய இருவரும் நம்முடைய அப்பாவை அடித்தவனை சும்மா விடக்கூடாது அவனை திருப்பி அடிக்க வேண்டும் என்று ஆவேசமாக செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 



இதனை அடுத்து சரவணன் மற்றும் தங்கமயில் ஆகிய இருவரும் சந்திக்கும் காட்சிகள் உள்ளன. சரவணனுக்கு கொழுக்கட்டை கொண்டு வரும் தங்கமயில் சாப்பிட கொடுக்க, சரவணன் அதை சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார். பின்னர் பாத்திரத்தில் உள்ள கொழுக்கட்டையை இருவரும் ஒரே நேரத்தில் எடுக்க முயற்சி செய்யும் போது இருவரின் கைகளும் பாத்திரத்தில் சிக்கிக் கொண்டன. கையும் கையும் பாத்திரத்தில் சிக்கிக் கொண்ட நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளை அடிக்கும் வகையில் இருவரும் பார்க்கும் ரொமான்ஸ் பார்வையுடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இனி அடுத்தடுத்த எபிசோடுகளில் அடிதடி மற்றும் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள், போலீஸில் எஃப் ஐ ஆர் போட்டு மூன்று அண்ணன் தம்பிகளையும் சிறையில் வைக்கும்  காட்சிகள் உள்ளதால் சரவணன் திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது இந்த பிரச்சனையிலிருந்து பாண்டியன் குடும்பத்தார் புத்திசாலித்தனமாக வெளியே வருவார்களா? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement