விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் இன்னும் இரு வாரங்களில் முடிவடையவுள்ள நிலையில் இந்த வார இறுதியில் இருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.தற்போது விஷால்,பவித்திரா,சவுந்தர்யா,அருண்,தீபக்,ஜாக்குலின்,ராயன்,முத்து ஆகியோர் மீதமாக உள்ளனர்.இந்த வாரம் அருண் மற்றும் தீபக் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான 2 ஆவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி " டாப் 5 இல் இருக்கிற contestent வந்தவங்க எப்படி விளையாடினாங்க" என கேட்க அதற்கு ஜாக்குலின் எழுந்து " வந்தவங்க இப்புடி வந்தாங்க சார் பாக்குறதுக்கே ஒரு மாதிரி பயமா இருந்திச்சு " என சொன்னார்.
பின்னர் அருண் எழுந்து " ஒரு கட்டத்தில எப்புடி ஆயிடிச்சுன்னா அவங்களுக்கு பேச content இல்லாமல் கடைசில நம்ம கிட்டையே கேட்க ஆரம்பிச்சுட்டாங்க நீ அவர் பத்தி என்ன நினைக்கிற" என கூறினார்.சவுண்டு "இவங்க தான் ஜெயிக்கணும்னு நோக்கியே போன மாதிரி இருந்திச்சு சார் எனக்கு" என கூற முத்துவும் எழுந்து "எல்லா பக்கமும் இருந்து கல்லு வரும் போது அதை எப்புடி தடுக்கிறது என ஒரு traing ஆக இந்த வாய்ப்பை கொடுத்தமாதிரி இருந்திச்சு சார்" என கூறியுள்ளார்.இவரது பேச்சுக்கு பார்வையாளர்கள் கூக்குரல் இட்டு கை தட்டியுள்ளனர்.
Listen News!