விஜய் டிவி தொலைக்காட்சியில் வில்லி வேடத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டிய ஸ்ரேயா சுரேந்தரின் நிச்சயதார்த்தம் கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.தற்போது அவர் தனது நிச்சயதார்த்தத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரேயா சுரேந்தர் கடந்த ஆண்டு பிரபலமான "செல்லமா" சீரியலில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தனது தொழில்முறை வாழ்க்கையை தொடங்கிய ஸ்ரேயா பின்னர் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்தார். 'செல்லமா' சீரியலில் திவ்யாவின் விலகலை தொடர்ந்து ஸ்ரேயா தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
பெரும்பாலும் வில்லியாக அறியப்பட்ட இவர் தற்போது தனது நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் மகிழ்ச்சியுடன் தனது கணவருடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். திருமணம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!