சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், ‘எஸ்டிஆர் 48’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் என்று கூறப்படுவது சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தான் பிரபல மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்த படமும் பெரிய பட்ஜெட் படம் என்றும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.180 கோடி என்றும் கூறப்படுகிறது. சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் மொத்த வசூலை 100 கோடி என்று கூறப்படும் நிலையில் 180 கோடி சிம்புவின் படத்திற்காக முதலீடு செய்ய பல தயாரிப்பாளர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
சிம்புவே நேரடியாக சில தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குறிப்பாக ஏஜிஎஸ், தில் ராஜு உள்ளிட்டவர்களிடம் அவர் பேசிய போது படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்று அவர்கள் பதில் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. சிம்பு, மோகன்லால் சம்பளம் மற்றும் பிரம்மாண்டமான செட் , கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செலவுகள் ஆகியவற்றை கணக்கு பார்த்து தான் 180 கோடி என்று பட்ஜெட்டை சிம்பு கூறிவரும் நிலையில் இதுவரை எந்த தயாரிப்பாளரும் இந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் பிசினஸ் மிகவும் சிக்கலாக இருக்கும் நிலையில் தியேட்டர் வருமானத்தை மட்டுமே வைத்து முதலீட்டை எடுக்க வேண்டிய நிலை தயாரிப்பாளருக்கு உள்ளது. அதுவும் கூட முதல் மூன்று நாட்கள் மட்டுமே மிகப்பெரிய வசூல் கிடைக்கும் என்ற நிலையில் சிம்பு படத்திற்கு 180 கோடி பட்ஜெட்டுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!