• Jan 08 2026

துல்கருக்கு பதில் சிம்பு.. ஜெயம் ரவிக்கு பதில் யார் தெரியுமா? ‘தக்லைஃப்’ சூப்பர் அப்டேட்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தக்லைஃப்’. இந்த படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் ஜெயம் ரவி இந்த படத்தில் இருந்து விலகியதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி நடிக்க இருந்த கேரக்டர்களில் நடிக்க இருக்கும் நடிகர்களின் தேர்வு குறித்த பணியில் மணிரத்னம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மான் கேரக்டரில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாகவும் அவருக்கு இந்த கேரக்டரில் நடிக்க மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ’எஸ்டிஆர் 48’ படத்தில் சிம்பு நடிக்க இருக்கும் நிலையில் தற்போது ‘தக்லைஃப்’ படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் ஜெயம் ரவி  நடிக்க இருந்த கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்த நிலையில் மீண்டும் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் இந்த படத்தில் இருந்து விலகப் போவதில்லை என்று த்ரிஷா மட்டும் உறுதியாக கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement