• Jan 19 2025

உங்க படம் நல்லாவே இல்ல! கால் பண்ணி ஓபனாக திட்டிய ஜெயம் ரவி! கொந்தளிக்கும் அருண்விஜய் ரசிகர்கள்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவுக்கு லவர் பாய் ஆக அறிமுகமாகி மாஸ் ஹீரோவாக வலம் வரும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஆவார். தமிழ் சினிமாவுக்கு "ஜெயம்" என்ற திரைப்படத்தின் ஊடாக அறிமுகமாகி முதல் படத்திலேயே அமோக வெற்றிபெற்றார்.


இதனை தொடர்ந்தே ரவி என்ற இவரது பெயரை ஜெயம் ரவி என்றும் மாற்றிக்கொண்டார். தற்போது ஜீனி என்ற மாயாஜால திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையிலேயே பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தாலும்  "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரத்தின் ஊடக பிரபலமானவர் அருண் விஜய் இவர் விஜயகுமாரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜெயம் ரவி அவர்கள் யூடியூப் தளம் ஒன்றில் பேர்ட்டி கொடுக்கும் போது பிராங்க் கால் செய்துள்ளார். அதில் "நீங்கள் நடித்த என்னை அறிந்தால் படத்தில் நீங்க வில்லனாக நடித்தது எனக்கு பிடிக்க வில்லை. 


திரைப்படம் நன்றாகவே இல்லை ,உங்களது நடிப்பு சரி இல்லை ,எனக்கு கனவில் கூட வந்து போகிறது" என்று மிகவும் நகைச்சுவையாக கலாய்த்துள்ளார்.  இதனை கேட்ட அருண்விஜய் சரி சரி அப்டித்தான் இனி விடு பாத்துக்கலாம் தம்பி என்று கூறுகிறார். இது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement