தனது இயல்பான கலை வெளிப்பாட்டால் திரை உலகில் உள்ள ஒட்டு மொத்த ரசிகர்களையும் மகிழ்வித்தவர் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். தற்போது இவருடைய மறைவு பேரதிர்ச்சிக்குள் உள்ளாக்கி உள்ளது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ரோபோ சங்கர், உடல் மெலிந்து தோற்றமே மாறி இருந்தார். அதன் பின்பு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தனது உடற் கட்டமைப்பை மீட்டெடுத்தார்.
இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ரோபோ சங்கர், புதிய படப்பிடிப்பு ஒன்றின் பூஜையிலும் கலந்து கொண்டார். இந்த படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்ற போதே மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தற்போது ரோபோ ஷங்கரின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றார்கள் . அது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த சினிமா துறையை சார்ந்தவர்களும் தங்களுடைய இரங்கலை கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ரோபோ சங்கர் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர்.
அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர், அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ரோபோ சங்கர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன் என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Listen News!