தமிழ் சினிமாவில் தனித்துவமான இசை மற்றும் நடிப்பின் மூலம் தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கியவர் விஜய் ஆண்டனி. வெறும் கலைஞராக அல்லாமல், மனிதநேயத்தையும், அடக்கத்தையும் வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டவர் என அவரது பேட்டிகள், சமூக செயல்பாடுகள் மூலம் மக்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அவர் மனதில் உள்ள உண்மையான எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார். “தவறு செய்தால் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன். என் மகளையும் வருத்தினால் மன்னிப்பு கேட்பேன். ஒரு வாழ்க்கை தான் அகங்காரம் எதற்காக?” என்ற அவரது வார்த்தைகள், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
விஜய் ஆண்டனி தனது பேட்டியில் கூறியவை, அவர் ஒரு நடிகராக மட்டும் அல்லாமல், ஒரு குடும்பத்தலைவராகவும், மனிதனாகவும் எவ்வளவு அடக்கமாக இருக்கிறார் என்பதை உணர்த்துகின்றது. இத்தகைய வார்த்தைகள் தமிழ் சினிமாவில் தரமான நடிகராக உள்ள ஒருவரின் எண்ணங்களை வெளிப்படுத்துகிறது.
Listen News!