தமிழ் சினிமாவில் தனித்துவமான ஸ்டைல், தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தேர்வுகளால் தனக்கென தனிச்சிறப்பை பெற்ற நடிகர் அருண் விஜய், தற்போது தனது புதிய திரைப்படமான ‘ரெட்ட தல’ மூலம் திரையில் கலக்கத் தயாராக இருக்கிறார்.
இப்படத்தை க்ரிஸ் திருகுமரன் இயக்கி வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘கண்ணம்மா’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது.
‘ரெட்ட தல’ என்ற தலைப்பே ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது. தல என்ற சொல் தமிழில் தனி வலிமையோடு பயன்படுத்தப்படும் வார்த்தை. அந்தவகையில் ரெட்ட தல என்ற தலைப்பு ரசிகர்களிடம் பல கேள்விகளை சிந்திக்க வைக்கிறது.
இப்போது வெளியாகவுள்ள பாடலில் அருண் விஜய் மற்றும் சித்தி இத்னானி இருவரும் காதல் ஜோடியாக காட்சியளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!