• Jan 19 2025

'அவள் தகுதியற்றவள்..' பிக் பாஸ் விசித்ராவின் வெளியேற்றம் தொடர்பில் ரச்சிதாவின் திடீர் பதிவு!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமான ரச்சிதாவும், சீரியல் நடிகர் தினேஷும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் நன்றாக மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்த ரச்சிதா, சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த தினேஷ், தற்போது ரசிகர்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளராக காணப்படுகிறார்.


தன்னுடைய காதல் மனைவி ரச்சிதாவை பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.அவர்கள் விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது. தனது வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக நடந்த சம்பவங்களை தினேஷ் அடிக்கடி சோகமாக பிக் பாஸ் ஷோவில் பேசி வருகிறார்.

எனினும், பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி தினேஷ், விசித்ரா இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் ரச்சிதா குறித்து நேரடியாகவே தாக்கி பேசியிருந்தார் விசித்ரா. இதனை கமலும் கண்டித்து இருந்தார்.

இதை தொடர்ந்து வெளியில் இருக்கும் ரச்சிதா மஹாலக்ஷ்மி தான் அனுபவித்த வலி எனக்கு தான் தெரியும் என அனைவருக்கும் தொடர்ந்து பதில் கொடுத்த வருகிறார். 


நடிகை விசித்ரா பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7இல்  விசித்ராவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், "அதே நாள்... இதுதான் ஹிஸ்டரியில் ரிப்பீட்டா...?" என்று கேப்ஷனோடு,  "அவள் யாரையும் காயப்படுத்த வில்லை.

ஆனால் நிறைய காயப்பட்டாள். 

அவள் யாரையும் கேலி செய்யவில்லை, 

ஆனால் நிறைய கேலி செய்யப்பட்டாள். 

அவள் யார் தகுதியையும் குறைத்து பேசவில்லை, 

ஆனால் அவள் தகுதியற்றவள் என்றே கூறப்பட்டாள். 

அவள் அன்பை மட்டுமே அனைவருக்கும் அளித்தாள். 

கண்ணீரை மட்டுமே சுமந்து செல்கிறாள்.... 

அவள் ஒரு சபிக்கப்பட்ட தேவதை" என்று அந்த பதிவில் இருந்தது. 



Advertisement

Advertisement