• Jan 18 2025

பிக் பாஸ் பூர்ணிமாவின் 'செவப்பி' படத்தின் டீசர் வெளியானது! தனது வாழ்த்துக்களை முதலில் பகிர்ந்த சிம்பு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

வேலூரில் பிறந்து வளர்ந்த பூர்ணிமா ரவி அராத்து ஆனந்தியாக ‘அராத்தி’ எனும் யூடியூப் சேனல் மூலமாக பிரபலமானார். இந்த சேனல் மூலம் பல வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருவார்.

கடந்த சில வருடங்களாக சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதோடு, பிக் பாஸ் பணப்பெட்டியுடன் கெத்தாக வீடு திரும்பினார்.

இந்நிலையில், தற்போது பூர்ணிமா ரவி ஹீரோயினாக நடித்த 'செவப்பி' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.


இதனை நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளதோடு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் சொல்லி உள்ளார்.

இவ்வாறு செவப்பி என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படத்தை MS ராஜா இயக்க இருக்கிறார். ஆஹா ஓடிடி தளத்திற்காக அந்த படம் உருவாக இருக்கிறதாம். இதனால் ரசிகர்கள் பூர்ணிமாவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement