• Jan 09 2026

கண்ணுபடப் போகுதப்பா.!! BMW பைக்கில் கெத்தா போஸ் கொடுத்த ஷபானா- ஆர்யன் ஜோடி

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை உலகில் தன்னை நிரூபித்த நடிகை ஷபானா, ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்தார். 

இந்த சீரியல் குறுகிய காலத்திலேயே பெரும் பிரபலத்தை பெற்றதோடு, ஷபானாவை வீட்டுப் பெண்கள் மற்றும் இளம் தலைமுறை வட்டாரங்களில் பிரபலமான நட்சத்திரமாக மாற்றியது.


‘செம்பருத்தி’ சீரியலின் போது, ஷபானா தனது பார்வதி கேரக்டர் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதன்போது நடிகர் ஆர்யனை காதலித்திருந்தார். சில வருடங்களின் பின்னர், அந்த காதல் திருமணத்தில் முடிந்தது. தற்போது, ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்காக ஒரு புதிய தகவலை வழங்கியுள்ளனர்.

அதாவது, ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் BMW பைக் ஒன்றை வாங்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளனர். பைக் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement