• Sep 27 2026

பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் ஜாய் கிரிசில்டா.. கடைசி நேரத்தில் வெளியான தகவல்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ‘பிக்பாஸ் தமிழ்’, தற்போது தனது 10-வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடிகையும் தொகுப்பாளருமான ஜாய் கிரிசில்டா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.


இதுகுறித்து தற்போது ஜாய் கிரிசில்டா விளக்கம் அளித்துள்ளார். அதாவது, " தான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தனது குழந்தை ராகா மிகவும் சிறியவனாக இருப்பதால், அவனை விட்டிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது தனக்கு சரியாகத் தோன்றவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தன்னைச் சுற்றி பரவி வந்த வதந்திகளுக்கு ஜாய் கிரிசில்டா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவரது விலகலுக்குப் பிறகு 8 மற்றும் 9-வது சீசன்களை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தற்போது 10-வது சீசன் தொடங்க உள்ளது.

புத்தம் புதிய போட்டியாளர்கள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிகரமான தருணங்கள் மற்றும் மோதல்கள் என இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் பிரம்மாண்ட தொடக்க விழா செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement