துல்கர் சல்மான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், வசூலில் சற்று தடுமாறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் செப்டம்பர் 3-ம் தேதி வெளியான இப்படம், தமிழில் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இருப்பினும், தமிழ்நாட்டில் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஓபனிங் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். துல்கர் சல்மானுடன் கயாடு லோஹர், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாத், மிஷ்கின், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமார் ரூ.85 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முதல் இரண்டு நாட்களில் படத்தின் வசூல் எதிர்பார்த்த வேகத்தில் அதிகரிக்கவில்லை. இதுவரை இந்திய அளவில் ‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் ரூ.10.06 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காதது படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், அடுத்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.10 முதல் ரூ.15 கோடி வரை வசூல் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. வார இறுதி வசூல் படத்தின் ஒட்டுமொத்த நிலையை எந்த அளவுக்கு மாற்றும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!