• Jan 19 2025

'சரிகமப' கிராண்ட் பைனல் நிகழ்ச்சி.. ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்? புதிய அப்டேட் இதோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

உலகளவில் குழந்தைகளின் இசை திறமையை அறிய வைக்கும் நிகழ்ச்சியாக 'சரிகமப' காணப்படுவதோடு, மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தையும்  பெற்றுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் சனி, ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபலமான ஷோ தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்.

இம்முறை  லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3  இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.


இதில் பங்கேற்ற குழந்தைகளின் திறமையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முறையில் இறுதிவரை நகர்த்திச் சென்றுள்ளனர். 

அதன்படி, இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்குவதோடு,  ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் ஆகிய நான்கு பேரும் இதுவரை பைனலுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களை தொடர்ந்து ஃப்ரீ ஸ்டைல் ரவுண்டு மூலமாக நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கிராண்ட் பைனல் நிகழ்ச்சி வரும் 17-ம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை நேரில் காண ஆசைப்படுபவர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இலவச டிக்கெட்டுகளை பெற சென்னை கிண்டியில் உள்ள ஜீ தமிழ் அலுவலகத்தை அணுகலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறுதியாகவுள்ள 6 போட்டியாளர்களில் யார் டைட்டிலுடன் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை தட்டி செல்ல போகிறார்கள்?  என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement