• Mar 11 2025

சர்தார் 2 வெளியீட்டு தேதியில் மாற்றமில்லை..! எப்போது தெரியுமா..?

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

கார்த்தி நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியாகிய சர்தார் திரைப்படத்தின் பகுதி இரண்டினை மித்ரன் இயக்கி வருகின்றார். சர்தார் திரைப்படத்தினை விட மூன்று மடங்கு செலவில் இப் படம் தயாராகி வருகின்றது. Prince Pictures படத்தினை தயாரித்து வருவதுடன் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் தற்போது கார்த்தி டப்பிங் வேளைகளில் தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இப் படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.கார்த்தி தனது பகுதிகளுக்கு டப்பிங் செய்யத் தொடங்கியுள்ளார் மீதமுள்ள நடிகர்கள் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் தற்போது படம் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தினை தீபாவளி அன்று வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாகவும் எந்த வித தடைகள் வந்தாலும் படம் வெளியாகுவது உறுதி எனவும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் கடைசி சூட்டிங் மைசூரில் இடம்பெற்று வந்துள்ளது. இதன் போது கார்த்திக்கு accident ஏற்பட்டுள்ளமையினால் படம் இடை நிறுத்தி வைக்கப்பட்டு தற்பொழுது ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement