• Dec 12 2025

வி. சாந்தாராம் பயோபிக் படத்தில் தமன்னாவின் லுக்கை வெளியிட்ட படக்குழு.! வெளியான போஸ்டர்

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றிய நாயகர்களில் முக்கியமான ஒருவர் வி. சாந்தாராம். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகளில் திகழ்ந்த இவர், தனது படங்களின் மூலம் சமூக மாற்றங்களையும் மனிதாபிமானத்தையும் தன்னுடைய கலைப்படைப்புகளில் பிரதிபலித்தவர். 


அவரது வாழ்க்கை, போராட்டம், படைப்பு, உறவுகள் அனைத்தையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் அவருடைய பயோபிக் "சித்ராபதி வி.சாந்தாராம்” தற்போது பாலிவுட் உலகின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது.

இந்த மாபெரும் படத்தை அபிஜித் தேஷ்பாண்டே இயக்குகிறார். அவருடைய சினிமா அணுகுமுறை, கதையின் ஆழத்தை உணர்த்தும் விதமாக இருக்கும் என்பதால் இந்த பயோபிக் மிகப்பெரிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் நடிகை தமன்னா ஜெயஸ்ரீயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஜெயஸ்ரீ என்ற கதாபாத்திரம்  வி. சாந்தாராமின் இரண்டாவது மனைவியாகவும் அவரது சினிமா பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவராகவும் விளங்குகிறார். இந்நிலையில், படக்குழு தமன்னாவின் ஜெயஸ்ரீ First Look போஸ்டரை தற்பொழுது வெளியிட்டுள்ளது. 

Advertisement

Advertisement