• Dec 12 2025

ராஜியின் கனவை நிறைவேற்றும் கதிர்.! மயிலுடன் பிரச்சனை பண்ணிக் கொண்டிருக்கும் சரவணன்...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் ராஜி கிட்ட வந்து பொலிஸ் வேலைக்கு exam நடக்கப்போகுது என்று சொல்லுறார். அதைக் கேட்ட ராஜி சந்தோசப்படுறார். பின் ராஜி போன தடவை மிஸ் ஆகிடுச்சு ஆனா இந்த தடவை எப்புடியாவது எழுதி பாஸ் பண்ணிடனும் என்கிறார். அதனை அடுத்து கதிர் இனி ட்ராவெல்ஸ் வேலை எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன் நீ படி என்கிறார்.


அதைக் கேட்ட ராஜி என்னால ரெண்டையும் பார்த்துக்க முடியும் என்கிறார். மேலும், நான் ட்ராவெல்ஸிற்கு வந்தே படிக்கிறேன் என்கிறார் ராஜி. மறுபக்கம் பாண்டியனோட கடைக்கு வந்த ஒராள் உங்கட கடையோட பிரான்ச் ஓபன் பண்ணிட்டிங்கள் போல என்று கேட்கிறார். அதுக்கு பாண்டியன் நாங்க அப்புடி எல்லாம் ஓபன் பண்ணேல... அது வேற ஒராளின்ர கடை என்கிறார்.

பின் சரவணன் அங்க வந்து அந்தக் கடைக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்ல என்கிறார். அதனை அடுத்து மயில் இந்த ஆளு வேணும் என்று தான் கேட்குது.. இந்த மாதிரியான ஆளுக்கு பதில் சொல்லாதீங்க என்கிறார். மேலும் நான் வேலை விஷயமாத் தானே பேசினேன் அதுக்கேன் இப்புடி முகத்தை வச்சிருக்கீங்க என்று கேட்கிறார் மயில். 


பின் சரவணன் கடையில தன்னும் நிம்மதியா இருக்க விடு என்கிறார். அதனை அடுத்து மீனா செந்திலுக்குப் போன் பண்ணி சாப்பாடு நல்லா இல்ல நீங்க கடையில போய் வாங்கிச் சாப்பிடுங்க என்கிறார். பின் மயிலோட அப்பா கடைக்கு வந்து நிக்கிறதைப் பார்த்த மயில் கோபப்படுறார்.அதனைத் தொடர்ந்து சரவணன் மயிலோட அப்பாவை இங்க இருந்து கிளம்பச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement