சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவும் ரோகிணியும் பிளான் போட்டதன் படியே லட்சுமி அம்மா வீட்டிற்கு வந்து தன்னுடைய மகள் கார் ஆக்சிடென்டில் இறந்துவிட்டதாக நாடகம் ஆடுகின்றார்.
மேலும் அவளுடைய முகம் சிதைந்து விட்டதாகவும் கடைசியில் அவளை பார்க்க முடியவில்லை, அவருடைய நண்பர்களே அவருக்கான காரியத்தை செய்து முடித்து விட்டனர் என்று அழுது ஒப்பாரி வைக்கின்றார்.
இதையெல்லாம் நம்பிய விஜயாவும் அவருக்கு ஆறுதல் சொல்லுகின்றார். அதற்கு பிறகு க்ரிஷ் உங்களுடன் இருப்பதற்கு தான் விரும்புகின்றான் என்று சொல்ல, அண்ணாமலை சம்மதம் தெரிவிக்கின்றார். ஆனால் விஜயா மறுப்பு தெரிவிக்கின்றார்.

எனினும் முத்து அவருடைய பேச்சை கேட்காமல் க்ரிசை வீட்டிற்கு அழைத்து வருகின்றார். லட்சுமி அம்மாவும் நான் ஊருக்கு போய் எல்லாவற்றையும் சரி செய்து விட்டு மீண்டும் வந்து க்ரிஷை கூட்டிப் போகின்றேன் என்று சொல்லுகின்றார்.
மீனாவும் நீங்க ஊருக்கு போய் திரும்பி வரும்போது இங்கு எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லுகிறார். பின்பு ரோகிணி உடன் பேசிய விஜயா இவங்க பண்ணுற கூத்துக்களை பார்த்தியா? இதற்கு ஒரு முடிவு கட்டணும். பார்வதி வீட்டுக்கு செல்வோம் வா என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!