• Dec 09 2025

ஒரு டிக்கெட் 2 லட்சமா.? பாலையாவுக்கு எகிறிய மவுசு.. வெளியான தகவல்

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில்  வெளியாக உள்ள அகண்டா 2 திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக சம்யுக்தாவும், வில்லனாக ஆதி பினிசெட்டியும்  நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ' அகண்டா 2 தாண்டவம்' என்ற பெயரில் டீசர் ஒன்று வெளியாகியது. இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

அதில் சிவன் லுக்கில்  திரிசூலத்துடன் பாலகிருஷ்ணா என்ட்ரி கொடுக்கிறார். பின்பு அகோரி தோற்றத்திலும், சாதாரண தலைவர் தோற்றத்திலும் தோன்றினார். வில்லனும் மிரட்டலான என்ட்ரியுடன் காட்சி கொடுக்கின்றார். 


அகோரி தோற்றத்தில் பாலகிருஷ்ணா பேசிய வசனங்கள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.  டீசரிலேயே  சிவன் மற்றும் அகோரியாக அவருடைய ஆக்சன் காட்சிகள் மிரட்டலாக இருந்தது. 

இந்த படம் டிசம்பர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது.  இதனால் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள்  விரைவாக இடம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  அகண்டா 2 படத்திற்காக,  ஜெர்மனை சேர்ந்த பாலையா ரசிகர் ஒருவர், ஒரு டிக்கெட்டை 2 லட்சம் ரூபா கொடுத்து வாங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன. 

Advertisement

Advertisement