• Jan 19 2025

ரெடின் கிங்ஸ்லி மனைவிக்கு மகள் இருக்கிறாரா? முதல் கணவர் யார்?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொலைக்காட்சி சீரியல் நடிகை சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சங்கீதா ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு மகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் மகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சங்கீதா ’எனக்கு மகள் இருப்பதாக செய்தி போடுகிறார்கள், உண்மையில் என்னுடன் இருக்கும் அந்த குழந்தை எனது சகோதரியின் மகள், ஆனாலும் எனது மகள் என்று செய்தி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள், நானும் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டேன்’ என்று கூறினார்.

மேலும் நான் பணத்துக்காக ரெடின் கிங்ஸ்லியை  திருமணம் செய்து கொண்டதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். நான் பணத்துக்காக அவரை திருமணம் செய்யவில்லை, நான் ஒன்றும்  இல்லாதவன் இல்லை. அவருடைய அரவணைப்பு குணம் தான் என்னை ரொம்ப கவர்ந்தது என்று கூறினார்.

மேலும் இந்த வயதில் எதற்கு திருமணம் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள், அவர்களால் எங்களது உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது, நாங்கள் எங்களை இளமையுடன் வைத்திருக்கிறோம் என்று தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

Advertisement

Advertisement