• Jul 27 2024

மே 30 முதல் ஹாட் ஸ்டாரில் புதிய சீரியல்.. விகடன் தயாரிப்பு.. யார் யார் நடிக்கின்றனர்?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

சன் டிவி மற்றும் விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாகவே புதிய சீரியல்கள் ஆரம்பமாகி கொண்டிருக்கும் நிலையில் ஹாட்ஸ்டாரில் வரும் 30-ஆம் தேதி நான் புதிய சீரியல் ஆரம்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் முன்னோட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

‘உப்பு புளி காரம்’ என்ற டைட்டிலில் கலகலப்பான சீரியல் மே 30ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாகவும் இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஸ்வின், தீபிகா, கிருஷ்ணா நடித்துள்ளனர்.

விகடன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த சீரியலை எம் ரமேஷ் என்பவர் இயக்கி உள்ளார். ஷேக் இசையமைக்க பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கலகலப்பான குடும்ப செண்டிமெண்ட் கொண்ட இந்த சீரியல் ஒரு மகிழ்ச்சியான இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்காக சீரியலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த சீரியலின் டைட்டில் வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. கனாக்காலம் காலங்கள் உட்பட பல ஹாட்ஸ்டார் சீரியல்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல் ‘உப்பு புளி காரம்’ காதல், காமெடி ஒரு சீரியலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'உப்பு புளி காரம்' ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட அழகான கதையாகும்.

Advertisement

Advertisement