• Jan 19 2025

பிக்பாஸ் போயிட்டு வந்த பிறகும் சான்ஸ் கிடைக்கல.. இனி தயாரிப்பு தான்: அதிரடி முடிவெடுத்த சனம்ஷெட்டி..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வாய்ப்புகள் குவியும் என்ற எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர் தற்போது தயாரிப்பாளராக மாறி உள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். 

தமிழ் திரை உலகில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி. இந்த நிலையில் தான் அவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் அதன் பின்னர் ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கனவு கண்டார். 


ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததை அடுத்து தற்போது அவர் தயாரிப்பாளராக மாறி உள்ளார். முதல் கட்டமாக யூடியூப் வீடியோக்கள் தயாரிக்க இருப்பதாகவும் குறிப்பாக ஆல்பங்கள் மற்றும் குறும்படங்கள் தயாரிக்க இருப்பதாகவும் இதற்காக திறமையானவர்களை கண்டெடுக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சனம் ஷெட்டியின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் எந்த காரணத்தை முன்னிட்டும் திரைப்படங்கள் தயாரிக்க செல்ல வேண்டாம் என்றும் குறும்படங்கள் மற்றும் மியூசிக் ஆல்பம் தயாரிப்பது நல்ல ஐடியா என்றும் தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement