• Feb 23 2025

மீண்டும் சந்திரமுகி கெட்டப்பில் கம்பேக் கொடுத்த ஜோதிகா! பாலிவுட்டை மிரட்டும் 'சைத்தான்' ட்ரெய்லர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிரியதர்ஷன் இயக்கிய டோலி சஜா கே ரத்னா என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய ஜோதிகாவின் சினிமா பயணம்,  அஜித்தின் வாலி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் குஷி, அர்ஜுனுடன் ரிதம், கமல்ஹாசனுடன் தெனாலி, சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்து இருந்தார்.

நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது அவருடன் காதல் ஏற்பட இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.


மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோதிகா நடித்த சந்தரமுகி திரைப்படம் அவரின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. 

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தனது கெரியரில் பிஸியாக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, இறுதியாக நடிகர் மம்முட்டியுடன் இணைந்து காதல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். 


இந்த நிலையில், இந்தியில் உருவாகியுள்ள 'சைத்தான்' திரைப்படம் மூலம் மீண்டும் சந்திரமுகியாக கம்பேக் கொடுக்கவுள்ளார் ஜோதிகா.

இந்தியில் விகாஸ் பால் இயக்கியுள்ள சைத்தான் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா, ஜான்கி போடிவாலா ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். 

தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பாலிவுட் ரசிகர்களை மிரட்டியுள்ளது. இதோ அந்த வீடியோ,



Advertisement

Advertisement