தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் தனது 173 வது படத்தை சுந்தர். சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கமலஹாசன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இந்த தகவல் அதிகார்வபூர்வமாக வெளியாகி சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக கமல் அறிமுகமானார். அதன் பின்பு கமல் நாயகனாக நடித்த அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமானார். அப்போதிருந்தே ரஜினி - கமல் இடையே நல்ல நட்பு ஆரம்பித்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ரஜினி - கமல் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 21 படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரின் வளர்ச்சியில் கே. பாலச்சந்தரின் பங்கு மிக அதிகம் என பேசப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்களில் வில்லனாக ரஜினி நடித்திருப்பார். அதன் பின்பு இருவரும் தங்களுக்கான தனித்தனி பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இயக்குநராக சுந்தர். சி வலம் வருகின்றார். இவருடைய படங்கள் நகைச்சுவை, ஹாரர், திரில்லர் என்று கலகலப்பாகவே இருக்கும். ரஜினியை வைத்து அருணாச்சலம் படத்தையும், கமலை வைத்து அன்பே சிவம் படத்தையும் சுந்தர். சி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 173 வது படத்தில் ஷாருக்கானுக்கு ஒரு சிறப்பு கதை பாத்திரம் ஆஃபர் செய்திருந்தாலும் அதை அவர் நிராகரித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் அந்த ரோலுக்காக சல்மான் கானை அணுகி வருகின்றாராம் சுந்தர். சி. அதற்கு அவர் ஒப்புக் கொண்டால் சுந்தர் சி இயக்கும் இந்த படம் மீது சினிமா உலகமே கவனத்தை திருப்பும். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும் என்பது உறுதி.
Listen News!