• Feb 22 2025

மேஜர் முகுந்த் வரதராஜன்க்கு அஞ்சலி!தேசியப்போர் நினைவிடத்தை பார்வையிட சென்ற சாய் பல்லவி..

Mathumitha / 3 months ago

Advertisement

Listen News!

எதிர்வரும் 31 ஆம் திகதி தீபாவளியினை முன்னிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலகாசன் ப்ரொடக்சனில் ஜீவி பிரகாஷின் இசையமைப்பில் சாய்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அமரன் இத் திரைப்படமானது இராணுவவீரர்  மேஜர் முகுந்த் வரதராஜன்கு வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தற்போது நடிகை சாய் பல்லவி  "அமரனுக்கான ப்ரோமோஷன் வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னதாக தேசியப் போர் நினைவிடத்தைப் பார்க்க விரும்பினேன். இந்த புனிதமான கோவிலில், நமக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களின் நினைவாக ஆயிரக்கணக்கான "செங்கல் போன்ற மாத்திரைகள்" உள்ளன. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரம் சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் போது நான் மிகவும் உணர்ச்சிக்குளாகினேன் "என குறிப்பிட்டு அங்கு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



Advertisement

Advertisement