• Apr 05 2025

அழகோ அழகு அவள் கண் அழகு...! டுவிட்டரில் டான்ஸ் ஆடிக் கலக்கும் சாய் தன்ஷிகா..!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகா தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களின் மூலம் அதிகளவான ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். குறிப்பாக,தன்ஷிகா நடித்த கபாலி, பேராண்மை , யாயா மற்றும் மாஞ்சா வேலு போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றன.


அத்தகைய தன்ஷிகா தற்பொழுது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு சிறப்பான நடன வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். டுவிட்டரில் வெளியான தன்ஷிகாவின் சூப்பரான டான்ஸ் வீடியோ தற்பொழுது அனைத்து மக்கள் மத்தியிலும் தீயாகப் பரவி வருகின்றது.


அந்த வீடியோவில் நடிகை சாய் தன்ஷிகா தற்போதைய ட்ரெண்டிங்கில் உள்ள பாடலுக்கு தனது அழகான நடனத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் ஆடிய டான்ஸைப் பார்த்த ரசிகர்கள் ஒரு மணிநேரத்துக்குள்ளேயே அதிகளவான கமெண்ட்ஸை பதிவிட்டு வருகின்றார்கள். மேலும் சாய் தன்ஷிகா அதன்போது அழகாகவும் ஸ்டைலாகவும் நடனமாடியுள்ளார் எனவும் பாராட்டியுள்ளனர். இந்நடிகை தற்பொழுது நடிப்பில் மட்டுமல்ல, நடனத்திலும் தனக்கென தனி இடத்தை உருவாக்க முடியும் என்பதை இந்த வீடியோ மூலம் நிரூபித்துள்ளார்.





Advertisement

Advertisement