தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் சமீபத்திய நேர்காணலில் கலந்து கொண்டு, இசைத்துறையின் மேதை ஏ. ஆர்.ரஹ்மான் பற்றிய ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ரவிக்குமாரின் பேச்சில் ரஹ்மானின் தனித்துவமான திறமை மற்றும் செயல் என்பன பற்றிய நுணுக்கமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
1999ம் ஆண்டு வெளியான "படையப்பா" திரைப்படம், தமிழ் சினிமாவின் பொற்கால படைப்பாக கருதப்பட்டது. மேலும் அந்தப் படத்தில் இடம்பெற்ற "சுத்தி சுத்தி வந்தீங்க" என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்தப் பாடலின் பின்னணி இசையில், குறிப்பாக ஹரிணியின் சிரிப்பு சவுண்ட் மிக முக்கியமான பங்கினை வகித்துள்ளது. உண்மையில் அந்த சிரிப்பு எப்படி உருவானது என்பதை கே. எஸ். ரவிக்குமார் தற்பொழுது சிறப்பாகக் கூறியுள்ளார்.
கே. எஸ். ரவிக்குமார் அதன் போது, "அந்த பாட்டின் குறிப்பிட்ட இடத்தில், ஹரிணி சிரிக்க வேண்டும். எனினும், ஹரிணி எவ்வளவோ முயன்றும் அதில் சிரிப்பை வெளியிட முடியவில்லை. இதனால் இசைக்குழுவினர் அவரை சிரிக்க வைக்க பல முயற்சிகள் செய்தும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது என்று நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார்.
அதன்பிறகு ரஹ்மான் ஹரிணியின் உண்மையான சிரிப்பை யாருக்கும் தெரியாமல் ரெக்கார்ட் செய்து அப்பாடலில் இணைத்துக் கொண்டார். அத்துடன் "பாடலை முழுமையாகக் கேட்ட பின் தான் அதில் ஹரிணியின் சிரிப்பு இருப்பதனை உணர்ந்தேன்." என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.
Listen News!