தென்னிந்திய திரையுலகில் தனது எதார்த்த நடிப்பின் மூலம் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் விக்ரம். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீர தீர சூரன் படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளைப் பகிர்ந்துள்ளார். இத்தகவல்கள் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
விக்ரம் அதில் வீர தீர சூரன் படத்தின் முதல் ஷோ நிறுத்தப்பட்டது என்பதால் மிகுந்த கவலை அடைந்ததாக தெரிவித்துள்ளார். எனினும், "நாங்கள் சினிமாவுக்காக எது வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். இதெல்லாம் பெரிய விடயமா?" என எண்ணியதாகக் கூறியுள்ளார்.
மேலும் விக்ரம் கூறியதாவது, "படத்தின் முதல் ஷோ நின்றுவிட்டது என்ற செய்தி எங்களுக்கு திகைப்பினை அளித்தது என்றதுடன் சிறிது நேரம் கவலையோடும் சோர்வோடும் இருந்தோம் என்றார். எனினும், நாங்கள் எப்பொழுதும் ஒன்றை மட்டும் நம்புகின்றோம் , நல்ல வேலைக்கு எப்பொழுதும் நன்மை கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் திரையரங்குகளில் படம் வெளியாகிய பின்னர் ரசிகர்கள் அதற்கு பாராட்டிய வார்த்தைகளை நேரடியாக கேட்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது எனவும் கூறியுள்ளார். விக்கிரமின் இக்கருத்துக்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!