விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்துவின் காரில் மலேசியாவில் இருந்து வந்த தம்பதியினர் சவாரி செல்கின்றார்கள். இதன்போது அவர்களுக்கு 60வது திருமணம் என்றும் அதற்காக கோவிலில் சின்ன பூஜை செய்ய வேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள்.
இதனால் மீனாவுக்கு முத்து போன் பண்ணி விஷயத்தை சொல்ல, மீனா எல்லாவற்றையும் ரெடி பண்ணுகின்றார். அங்கு போனதும் அவர்களுக்கு மாலை மாற்றி சிறப்பாக திருமண நாளை செய்து வைக்கின்றார்கள். இதனால் அவர்கள் இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். அதன் பின்பு மீனா அவர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பதற்கு முத்துவுக்கு ஐடியா கொடுக்கின்றார்.
மேலும் அவர்களை வீட்டுக்கு அழைத்தால் ரோகிணியின் அப்பா பற்றி விசாரிக்கலாம் என்று சொல்ல, இந்த ஐடியா எனக்கு தெரியாமல் போய்விட்டது என்று முத்து சொல்லுகின்றார். அதன் பின்பு குறித்த தம்பதியினரை வீட்டிற்கு வருமாறு அழைக்கின்றார்கள். அவர்களும் சரி என சொல்லுகின்றார்கள்.
அந்த நேரத்தில் சிட்டி கோவிலுக்கு வந்து சிசிடிவி புட்டேஜை கேட்கின்றார். அதற்கு கோவில் நிர்வாகி மீனா கேட்டே நாங்கள் கொடுக்கவில்லை. அதற்கு போலீஸ் அல்லது நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டும் என்று சொல்லி அனுப்புகின்றார். சிட்டி வந்து போவதை சத்யா மற்றும் மீனாவின் குடும்பத்தினர் பார்க்கின்றார்கள். ஆனாலும் மீனா அவர் சிசிடிவி புட்டேஜை வாங்கத்தான் வந்ததாக சொல்கின்றார்.
இன்னொரு பாகம் விஜயா டான்ஸ் கிளாஸை ஆரம்பிக்கின்றார். இதன் போது அங்கிருந்த காதல் ஜோடி நீங்க வீடு மாறி போய்விட்டால் நாங்கள் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம் என்று சொல்ல, நான் வீடு மாறவில்லை உங்களுக்காக தான் என்று விஜயா சொல்லுகின்றார். இதனால் அவர்கள் ஏற்கனவே ஓடிப் போய் திருமணம் செய்ய நினைத்த ஐடியாவை கைவிடுகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்..
Listen News!