கடந்த அக்டோபேர் 6ம் திகதி விஜய் சேதுபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் ஆரம்பத்தில் சுவாரஸ்யம் அற்றதாக காணப்பட்டாலும் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
பிக் பாஸ் சீசன் 8க்கான இறுதி டைட்டிலுக்கான போட்டியில் முத்துக்குமரன், ஜாக்குலின், தீபக்,பவித்ரா, சொந்தர்யா, ராயன், அருண் மற்றும் விஷால் ஆகியோர் காணப்படுகின்றனர்.
இவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட்டாகி வெளியே சென்ற 8 போட்டியாளர்கள் மீண்டும் நுழைந்து உள்ளார்கள். இதனால் பிக் பாஸ் இல்லம் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு ரவீந்தரும் விஷாலும் பேசிய பேச்சுவார்த்தை தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி ரவீந்தர் விஷாலிடம் தர்ஷிகாவுக்கு ரொம்ப ஸ்பேஸ் கொடுத்தாக சொல்லுகிறார்.
அதற்கு விஷால், இப்போ எனக்கு வெளில யாரும் ப்ரோபோஸ் பண்ணி இருந்தால் அதை அவாய்ட் பண்ணி இருப்பேன். ஆனால் இங்க வச்சு ஒன்னும் முடியல என்று சொல்லியுள்ளார்.
Listen News!