• Sep 07 2024

மீனா சொன்ன விஷயத்தால் வெளுத்தது ரோகிணியின் சாயம்...! மனோஜ் உருக்கம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்துவும் மீனாவும் ஜெயித்ததற்காக மேளதாளத்துடன் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். இதைப்  பார்த்து விஜயா வயிறு எரிகின்றார். ஸ்ருதியும் ரவியும் சென்று முத்து மீனாவுடன் ஆடுகின்றார்கள்.

அதன்பின்பு விஜயா வெறுப்பாக ஆர்த்தி எடுக்க, அவருடன் சேர்ந்து மீனாவின் அம்மாவும் அவர்களை ஆர்த்தி எடுத்து உள்ளே அனுப்புகின்றார். முத்து தான் ஜெயித்த பணத்தை அண்ணாமலையிடம் கொடுத்து சந்தோஷப்பட அவர் இந்த பணத்தை வீடு கட்டுவதற்காக வைக்குமாறு சொல்லுகின்றார்.

பிறகு விஜயா ரோகினி மனோஜிடம் ஏன் நீங்கள் ஜெயிக்கவில்லை என்று கேட்க, நடுவர்கள் சரியில்லை என மனோஜ் சொல்லுகின்றார். முத்து இந்த கட்டில் வந்த ராசி தான் எல்லாம் நல்லதா நடக்குது என்று சொல்ல, விஜயா அதற்கும் கிண்டல் அடிக்கின்றார்.


இதன்போது அண்ணாமலையும் அங்கு வர, மீனா அங்கு வந்த நடுவர்கள்  புருஷன் பொண்டாட்டினா சண்டை வரணும் அப்படி வரல என்றால் புருஷன் பொண்டாட்டி கிட்டயும் பொண்டாட்டி புருஷன் கிட்டையும் ஏதோ மறைக்கிறார்கள் என்று அர்த்தம் என சொல்ல, ரோகினி என்ன செய்வது என்று தெரியாமல் கிச்சனுக்குள் சென்று விடுகிறார்.

இதையடுத்து விஜயா போய் அப்படியா என்று கேட்க, இல்ல அவங்க இங்கிலீஷ்ல சொன்னாங்க இவங்க பாதியைத்தான் சொல்றாங்க என்று சமாளிக்கின்றார். அதன்பிறகு மனோஜ் நாம தான் சிறந்த ஜோடி நீ என் வாழ்க்கையில கிடைச்சது பெரிய விஷயம். என்ட பாஸ்ட் லைஃப் தெரிஞ்சு நீ என்னை ஏற்றுக் கொண்டது நான் லைப்ல மறக்கவே மாட்டேன் என பேசுகின்றார், இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement