ரிஷப் ஷெட்டியின் புதிய படம் ‘காந்தாரா சாப்டர் 1’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 2025 அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே இது ஒரு சாதனை செய்திருந்தது. இந்நிலையில், தற்பொழுது 2ம் நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது.
‘காந்தாரா (Kantara)’ என்ற பெயர் கேட்கும் போது, நம்ம நினைவுக்கு வரும் முதல் விஷயம் ரிஷப் ஷெட்டி தான். 2022ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் தேசிய மட்டத்தில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அது ஒரு கலாசார அடையாளமாகவும், ஒரு உணர்ச்சி தாக்கம் கொண்ட திரைப்படமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற prequel உருவாக்கம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த கதையின் தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்துள்ளது.
ரிஷப் ஷெட்டியின் ஸ்கிரிப்ட், நடிப்பு, மற்றும் இயக்கம் அனைத்தும் பாராட்டுதலுக்கு உரியவை. இது ஒரு தனித்துவமான கன்னட கலாசார அனுபவத்தை வழங்குகிறது, அதுவும் ஒரு மாஸ் கமர்ஷியல் ஸ்டைலில்.
அதன்படி, படம் வெளியான முதல் நாளே 65 கோடி வசூலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியான தகவலின் படி, 80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் இப்படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!