• Jan 19 2025

'Rise to Rule': விஜய்யின் அரசியல் படத்திற்கேற்ற டைட்டில்.. கடுப்பாகும் உதயநிதி?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 69’ படத்தை இயக்க இருப்பது எச் வினோத் தான் என்பது 90% உறுதி செய்யப்பட்ட நிலையில் இனிமேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் தான் வெளியாக வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் விஜய் - எச் வினோத் இணையும் படம் குறித்த தகவலை கொண்டாடி வருகின்றனர் என்பதும் இதனை அடுத்து ஃபேன்மேட் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில் ஒரு ரசிகர் தனது சமூக வலைதளத்தில் ’தளபதி 69’ படத்தின் ஃபேன்மேட் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் திருப்பி உள்ளது. அதில் ’தளபதி 69’ படத்திற்கு டைட்டிலுக்கு கீழே 'Rise to Rule' என்ற வார்த்தை தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் விஜய்யின் கடைசி படம் மற்றும் அரசியல் படத்திற்கான சரியான டைட்டில் ஆக இது உள்ளது என்றும் விஜய் ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். 

ஏற்கனவே தளபதி விஜய்யின் ‘தலைவா’ திரைப்படம் 'Time to Lead' என்ற டைட்டில் உடன் வெளியான நிலையில், அந்த படத்தின் போஸ்டருக்கு தான்  அன்றைய முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார் என்பதும் அந்த படத்தையே வெளியிட விடாமல் பல பிரச்சினைகள் செய்ததாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இன்றைய தமிழக அரசியலில் வளர்ந்து வரும் அரசியல்வாதியாக இருக்கும் உதயநிதியை குறி வைத்து இந்த டைட்டில் குறிப்பிடப்பட்டதாகவும் இந்த டைட்டில் ஒரிஜினல் போஸ்டரிலும்  வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த டைட்டிலை பார்த்து உதயநிதி கடுப்பாக வாய்ப்பிருப்பதாகவும் இதனால் விஜய் மற்றும் உதயநிதி தான் 2026 தேர்தலில் எதிரெதிர் அணிகளாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. 

மொத்தத்தில் ஒரு பெரிய அரசியல் கட்சியுடன் மோத விஜய் தயாராகி விட்டார் என்பதுதான் இந்த போஸ்டர் குறிப்பிடுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement