ரிஷப் ஷெட்டி இயக்கியும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகியுள்ள திரைப்படம் தான் 'காந்தாரா Chapter - 1'. இந்திய சினிமாவின் கலாச்சார அடையாளங்களை புனைந்த 'காந்தாரா' (2022) திரைப்படத்தின் முன்னோட்டமாக அமைந்துள்ள இந்த படம், அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில், படம் வெளியாகும் நாளை முன்னிட்டு, அதன் முக்கியமான பாடலாக இருக்கும் "ரெபெல்" லிரிக்கல் வீடியோ தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களுக்குள் YouTube மற்றும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெறும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'காந்தாரா Chapter - 1' என்பது, 2022ஆம் ஆண்டு வெளிவந்த 'காந்தாரா' திரைப்படத்திற்கு முன்னோட்டமாக உருவாக்கப்பட்ட ப்ரீக்வெல் திரைப்படம். இந்திய மரபு, கிராமியக் கலாசாரம், மற்றும் தெய்வ நம்பிக்கைகள் ஆகியவை மிக ஆழமாக எதிரொலிக்கும் இந்த கதையில், ரிஷப் ஷெட்டி ஒரு அதிரடியான கதாபாத்திரத்தில் மீண்டும் மின்னவுள்ளார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!