• Jan 18 2025

ரவீந்தர் எடுத்த உறுதிமொழி.. வருஷம் முழுக்க கடை பிடிப்பாரா? குவியும் கருத்துக்கள்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தான் ரவீந்தர். இவர் படங்களை தயாரித்ததை விட சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டது தான் அதிகம்.

சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்தார் ரவீந்தர். அவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றாலும் அந்த நேரத்தில் ரவீந்தரின் உடல் பற்றி நிறைய கமெண்ட்கள் கூறப்பட்டது.

ஆனால் அதையெல்லாம் தாண்டி எங்களுடைய மனம் ஒத்துப் போய் தான் நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தோம் எங்களுடைய திருமண வாழ்க்கை நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வோம் என இருவருமே பல பகுதிகளில் சொல்லியிருந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ரவீந்தர் மீது மோசடி வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். எனினும் அதன் பிறகு அவர் ஜாமினில் வெளியே வந்தார்.


இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகாலட்சுமியோடு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு கேப்ஷன் ஒன்றும் கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், நான் இப்போது உறுதியளிக்கின்றேன் மீதமுள்ள 364 நாட்களும் உங்களை கவனித்துக் கொள்வேன். நான் இன்று சிரிக்கவில்லை அதைவிட சந்தோசமாக உள்ளேன். குடும்பத்தை நேசித்து வாழுங்கள் என அழகாக பதிவிட்டுள்ளார்.

தற்பொழுது அவரின் பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருவதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement