• Jan 19 2025

பிரபல இயக்குனர் எடுத்த விபரீத முடிவால் உயிரிழந்த சோகம்! திடுக்கிடும் பின்னணி காரணம்?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் ரவி சங்கர். இவர் சரத்குமார், தேவயானி நடித்த சூர்யவம்சம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றதோடு, அந்தப் படத்தில் இடம்பெற்ற ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடலையும் எழுதியுள்ளார்.

அதற்குப் பிறகு மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களையும் எழுதியுள்ளார். குறிப்பாக எங்கே அந்த வெண்ணிலா என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்திற்கு பிறகு ரவிசங்கர் வேறு எந்த படமும் இயக்கவில்லை என கூறப்படுகின்றது. திருமணமே செய்து கொள்ளாமல் சென்னை கேகே நகரில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார்.


இந்த நிலையில், இயக்குனர் ரவிசங்கர் நேற்று தனது அறையில் விபரீத முடிவு எடுத்து தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனிமை மற்றும் பட வாய்ப்புகள் இல்லாமல் போன காரணங்களினால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் இந்த முடிவு எடுத்திருக்கலாம் எனவும் தற்போது கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement