• Sep 11 2025

விஜய் தேவரகொண்டா நீங்க வேற லெவல்..! ‘கிங்டம்’ ட்ரெயிலரால் உணர்ச்சிவசப்பட்ட ராஷ்மிகா.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, தனது அடுத்த படமான ‘கிங்டம்’ மூலம் மீண்டும் மாஸ் கம்பேக் கொடுக்க உள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான பின்னர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரிடமும் அமோகமான வரவேற்பைப் பெற்றது.


அந்த வகையில், விஜய் தேவரகொண்டாவின் காதலியாக பேசப்படும் ராஷ்மிகா இந்த ட்ரெய்லரைப் பார்த்து தனது உணர்வுகளைத் திறந்த மனதுடன் பதிவு செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக, ராஷ்மிகா தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 


அதில் அவர், “வாவ்!! என்ன ஒரு ட்ரெய்லர். அந்த அருமையான ‘கிங்டம்’ ட்ரெய்லரை பார்த்த பிறகு, இன்னும் படம் பார்க்க 3 நாட்கள் காத்திருக்க வேண்டுமா? இதெல்லாம் நியாயமில்லை! விஜய் தேவரகொண்டா நான் எப்போதும் உங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன் நீங்க வேற ரகம். நான் உங்களைப் போல நடிக்க வேண்டும் என கற்றுக் கொண்டே இருக்கிறேன். நான் அப்புடி கற்றுக் கொண்டாலும் உங்கள் நடிப்பில் 50 சதவீதமாக தான் அதுவும் இருக்கும்." என தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement