பிரபல இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் இடம் பெற்ற பாடலுக்கு நடிகர் ராம்சரண் அணிந்த உடைகளில் விலை குறித்து வலைப்பேச்சு செய்தியாளர் ஒரு ஷாக்கிங்கான செய்தியை கூறியுள்ளார்.
நடிகர் ராம்சரண் நடிப்பில் அடுத்த வருடம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் ஒரு பாடல் வெளியானது. இது குறித்து வலைப்பேச்சு சேனலில் இவ்வாறு கூறியுள்ளார்கள் "இந்த படத்தில் ஒரு பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆனது, அந்த பாடலில் ராம் சரண் 4 உடைகள் போட்டிருந்தார். அந்த உடைகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட 47 லட்சம் முடிவடைந்துள்ளது. அதிலும் அந்த உடையுடன் கோட் போட்டு இருப்பாரு அதற்கு 2 லட்சம் முடிவடைந்துள்ளது என்று கூறினார்.
மேலும் கூறிய இவர் "உடைக்கு இப்படி விலையா? என்று கேட்டால் அதற்க்கு பிரபல மனிஷ் மல்கோத்ரா என்ற காஸ்டியூம் டிசைனர் தான் அதை வடிவமைத்து இருக்காங்க. துணி விலையை விட தையல் கூலி விலை அதிகம்" என்று கூறியுள்ளார்கள் வலைப்பேச்சு செய்தியாளர்.
Listen News!