பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் ஆகியோரின் மகன் ரஹா விமானநிலையத்தில் கேமரா முன் கிவுட்டாக பாய் காட்டுகிறார். மகளின் செய்கையை பார்த்து ரன்பீர்- ஆலியா சிரித்து கொண்டே செல்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புத்தாண்டு விடுமுறையை கொண்டாட ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் தற்போது ஜெர்மனிக்கு புறப்பட்டனர். இந்நிலையில் விமானத்தில் ஏறுவதற்காக இவர்கள் விமான நிலையத்துக்குள் செல்லும் போது அவர்களின் மகள் ரஹா கபூரும் இருந்தார். அங்கு இருந்த ரசிகர்கள் ரஹா! ரஹா! என்று கூப்பிட அதனை பார்த்து திரும்பிய ரன்வீர் மகள் செய்த செய்கை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கூப்பிட்ட குரலுக்கு திரும்பிய ரஹா அழகாக கை அசைத்து பிளைன்கிஸ் கொடுத்தார். இதனை பார்த்து ரன்வீர் கபூர் சிரிக்க. அதனை பார்த்த ஆலியா ரஹாவின் செய்கையை பார்த்து வெட்க்கபட்டு சிரித்து கொண்டே செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ரஹாவின் கிவுட் ரியாக்ஷனை பார்த்த ரசிகர்கள் " குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது. ஆலியா எவ்வளவு அழகாக வளர்த்திருக்கிறார், விளையாட்டுத்தனமான குழந்தை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Listen News!