• Dec 29 2024

புதிய திரைப்படத்தில் நடிகர் சூரி..! இயக்குநர் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி!

subiththira / 15 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் விஜய் சேதுபதி தற்போது அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் நடிக்க கமிட்டாகி இருந்த பட வாய்ப்பு நழுவியுள்ளது. மேலும் அந்த படத்தில் நடிகர் சூரி கமிட்டாகியுள்ளதாகவும், அதேநேரம் விஜய் சேதுபதி திரைப்படம் இயக்கவுள்ளதாகவும் வலைப்பேச்சு சேனல் செய்தியாளர் கூறியுள்ளார். 


நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வலைப்பேச்சு செய்தியாளர் இன்னுமொரு தகவலை கூறியுள்ளார். " நடிகர் சூரி விடுதலை திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் ஒரு படம் நடிக்க இருக்கிறார். செல்பி திரைப்படத்தின் இயக்குநர் மதிமாறன் என்பவர் தான் இதனை இயக்க இருக்கிறார்.


ஆனால் முன்னர் மதிமாறன் இயக்குநருடன் இதே கதையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது வந்தது இவர்கள் கேட்ட திகதியில் விஜய்சேதுபதிக்கு வேறு திரைப்படங்களின் ஷூட்டிங் இருந்ததால் இந்த திரைப்படம் நழுவியுள்ளது. இதன் பின்னரே நடிகர் சூரி இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார்" என்று கூறினார்.


மேலும் கூறிய இவர் " சமீபகாலமாகவே விஜய் சேதுபதி திரைப்படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அந்த திரைப்படத்தின் வேலைகளிலும் நீண்ட நாட்களாக இவர் ஈடுபட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகிறது இதன் உண்மை தன்மை அவரே சொன்னால் தான் தெரியும்" என்று வலைப்பேச்சு செய்தியாளர் கூறியுள்ளார்

Advertisement

Advertisement