தனது மகளுடன் செல்பி எடுத்த ரம்பா… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!

தென்னிந்திய சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களை வென்ற நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரம்பா. இவர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ்’ எனப் பல படங்களின் வாய்ப்புக்களும் இவருக்கு வந்து குவியத் தொடங்கின.

இவ்வாறாகப் பல படங்களிலும் நடித்து வெற்றி வாகை சூடி வந்த நடிகை ரம்பாவிற்கு இலங்கையை சேர்ந்த இந்திர குமார் பத்மநாதன் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு கோலாகலமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தைத் தொடர்ந்து இவர் படங்களில் நடிப்பதில்லை.

இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இந்த அழகிய தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். சினிமாவில் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் ரம்பா சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகின்ற ஒருவர். இவர் அடிக்கடி தனது குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்வு செய்து வருவார்.

இந்த நிலையில் இவர் தற்போதும் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களானவை தற்போது இவரின் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்