• Jan 19 2025

எல்லா வடக்கனையும் அடிச்சு பத்தணும்.. ஒருத்தனையும் விட கூடாது..! சர்ச்சையை கிளப்பிய வடக்கன் டீசர்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எழுத்தாளராக காணப்பட்ட பாஸ்கர் சக்தி இயக்குனராக அறிமுகமான படம் தான் வடக்கன். இந்த படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியான நிலையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எம்டன் மகன், நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு, பாண்டியநாடு உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் தான் பாஸ்கர் சக்தி.

இவர் அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை எழுதியதோடு, தற்போது வடக்கன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார்.

வடக்கன் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் தயாரிக்கும் நிலையில், இந்த படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரவமாலா, ரமேஷ் வைத்யா, வந்தனா என பலரும் நடித்துள்ளார்கள்



இந்த படத்தில் கர்நாடக கலைஞரான எஸ்.ஜே. ஜனனி இசையமைத்துள்ளதோடு, இந்த படத்தை தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வடக்கன் படத்திற்கான தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.



இந்த நிலையில், வடக்கன் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை எக்ஸ் தனது பக்கத்தில் இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டார்.

குறித்த டீசரில் இந்த படத்தின் கதாநாயகன் வட மாநில தொழிலாளியிடம் அடி வாங்கி வந்தது போலவும், அவரால் தன்னுடைய வேலை பாதிக்கப்படுவது உணர்ந்ததாகவும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.

மேலும், எல்லா வடக்கனையும் அடிச்சு பத்தணும், ஒருத்தன் கூட நம்ம ஊர்ல இருக்கக் கூடாது. வெளியூரில் இருந்து பிழைக்க வந்தவன் இங்குள்ள வடையை சாப்பிட மாட்டானா? அவனுக்காக பானிபூரி போட்டுட்டு இருப்பியா என்ற அதிரடி வசனங்களும் இடம்பெறுள்ளது.



Advertisement

Advertisement