• Jan 19 2025

என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்.. போலீஸ் ஸ்டேஷனில் போல்டாக பேசிய மீனா.. ராஜியின் காதல் பார்வை..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் தனது மகன்களை வெளியே கொண்டு வர இன்ஸ்பெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தனது மகன்களுக்கு இப்படி நேர்ந்து விட்டதே என்று கோமதி தன் மருமகள்களிடம் சொல்லி புலம்புகிறார். தங்கமயில் வீட்டிற்கு இந்த விஷயம் தெரிந்து அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்து வருகின்றனர். மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் சென்று மூவருக்கும் ஆறுதல் கூறி என்ன நடந்தாலும் பார்த்துக்கிடலாம் என்று சொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், செந்தில், கதிர் ஆகிய மூவரும் அடிதடியில்  இறங்கியதை அடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் கைதான தனது மகன்களை வெளியே அழைத்து வர பாண்டியன் காவல் காவல் நிலையம் செல்லும் நிலையில் அங்கு இன்ஸ்பெக்டர் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் எஃப்ஐஆர் போட்டாகிவிட்டது என்றும் நீங்கள் ஒரு நல்ல வக்கீலை பார்த்து மேற்கொண்டு ஆக வேண்டியதை செய்யுங்கள்’ என்றும் கூறுகிறார்.



இதையடுத்து தனது மகள் குழலியின் மாப்பிள்ளைக்கு தெரிந்த வக்கீலை பாண்டியன் வரவழைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனை அடுத்து கோமதி தனது மருமகளிடம் இப்படி ஆகிவிட்டதே என்று அழுது புலம்ப, ராஜியும்  தன்னால் தானே இந்த நிலைமை ஏற்பட்டது என்று புலம்புகிறார். அப்போது வரும் மீனா என்ன நடந்தது என்று கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அப்போது தங்கமயில் அம்மா போன் செய்ய, கோமதி அழுகிறார், அதன்பின் ராஜி போனை வாங்கி நடந்ததை கூறுகிறார். உடனே தங்கமயில் அம்மா, அப்பா, போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகின்றனர்.

இதனை அடுத்து மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் போலீஸ் ஸ்டேஷன் செல்கின்றனர்.  போலீஸ் ஸ்டேஷனில் சரவணன், கதிர், செந்தில் ஆகிய மூவருக்கும் ஆறுதல் கூறும் மீனா, ‘யாரும் ஒன்றும் கவலைப்படாதீர்கள், இது சாதாரண அடிதடி கேஸ் தான், என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்’ என்று போல்டாக பேசி அனைவருக்கும் ஆறுதல் கூறுகிறார்.

அதே போல் ராஜி தன்னால் தானே இப்படி நடந்து விட்டது என்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்க, ‘நீ எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது கணவர் கூற இருவரும் முதல்முறையாக காதல் பார்வை பார்க்கும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement